22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

வங்கி உரிமம் எதிர்பார்க்கும் ஜீரோதா..

பங்குச்சந்தைகளில் தரகு நிறுவனங்களில் முக்கியமான ஒன்றாக வலம் வருவது ஜீரோதா நிறுவனம், இதன் இணை நிறுவனரான நிகில் காமத் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அதில் தனது நிறுவனம் ஒரு வங்கியை நடத்த வேண்டும் என்பதே முயற்சியாக இருப்பதாகவும், ஆனால் இதுவரை அது நடக்காதது வருத்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஜீரோதா நிறுவனத்தின் 2024 நிதியாண்டின் வருமானம் மட்டும் 62% உயர்ந்து 4,700 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த நிதியாண்டில் அந்நிறுவனத்தின் வருவாய் 21 விழுக்காடு உயர்ந்து 8,320 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்திய அளவில் குரோ செயலி முதல் இடத்திலும், ஜீரோதா செயலி இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்தியர்களின் வீட்டு சேமிப்புகள் கரைந்து வருவதாக செபி கூறியுள்ள நிலையில், கடந்த 2022-24 நிதியாண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 1.81லட்சம் கோடி ரூபாய் இழப்பு நேரிட்டதாகவும் செபி சுட்டிக்காட்டியது. இந்நிலையில் ஊக வர்த்தகத்தின் மீது செபியின் கட்டுப்பாடுகளால், ஒட்டுமொத்தமாக 60%அளவுக்கு F&O பிரிவு வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் நிகில் கூறியுள்ளார். நவம்பர் 20 ஆம் தேதி புதிய விதி அமலாக இருக்கும் நிலையில், கட்டணங்களை உயர்த்துவது குறித்து ஜீரோதா நிறுவனம் முடிவு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *