சொமேட்டோவின் பங்கை வாங்கிய பிரபல நிறுவனம்.

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ நிறுவனத்தின் 0.1 விழுக்காடு பங்குகளை பிரபல கோல்ட்மேன்சாச்ஸ் நிறுவனத்தின் சிங்கப்பூர் பிரிவு வாங்கியுள்ளது. இதேபோல் கடேன்சா மாஸ்டர்ஃபண்ட் நிறுவனமும் குறுப்பிடத்தகுந்த பங்குகளை விற்பனை செய்துள்ளது. இந்த இரண்டு பரிவர்த்தனைகளும் சேர்த்து 60,07,412 பங்குகளை விற்கப்பட்டுள்ளன. முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம், சொமேட்டோவில் தனது பங்கை 1 விழுக்காடாக மாற்றும் பணியை தீவிரமாக செய்து வருகிறது. 119.85 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பரிவர்த்தனை நடத்தப்படுகிறது. மிகப்பெரிய அளவில் பணம் கைமாறும்போது மத்திய பங்குச்சந்தைகளுக்கும், அதன் ஒருங்கிணைப்பு அமைப்புகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சொமேட்டோ நிறுவனம் பொதுவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. துரித வர்த்தகம் உள்ளிட்ட பிற தொழில்களையும் சொமேட்டோ நிறுவனம் செய்து வருகிறது. பல்வேறு துறைகளில் வேலை செய்து வரும் சொமேட்டோ நிறுவனத்துக்கு உலகளவில் முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடுகளையும் செய்து வருகின்றனர்.