இன்னும் அதிகரிக்குமா? எப்போது அதிகரிக்கும்?
வரலாற்றில் முதல் முறையாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாயை கடந்து உள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்க போகிறதா இல்லையா என்று சவுதிஅரேபியா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், கச்சா ஒரே நாளில் 5% அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக,டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாயை கடந்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒரு டாலரின் மதிப்பு 80 ரூபாயை கடந்துள்ளது கவனிக்கத்தக்கது. மேலும், 26-27ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில், அமெரிக்க ஃபெடரல் வங்கி, வட்டியை உயர்த்துமா என்று முதலீட்டாலர்கள் உற்று நோக்கி உள்ளார்கள். வட்டி உயரும் பட்சத்தில், மீண்டும் பங்குச்சந்தைகளில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்து வெளியேறுவார்கள். அதுவும் ரூபாயின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏற்கனவே, இந்த ஆண்டில் மட்டும் அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 2.20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளை விற்பனை செய்து பணத்தை வெளியே எடுத்து உள்ளார்கள். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவிற்கு இது முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில், வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால், மேலும் ரூபாயின் மதிப்பு சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.