திட்டமிட்டபடி விமான சேவை தொடங்கும் – ஆகாசா CEO
ஒவ்வொரு 2 வாரத்திற்கும் ஒரு புதிய விமானத்தை வாங்கி, விமான சேவையில் ஈடுபட உள்ளதாக ஆகாசா விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்..
ஆகாசா ஏர், அடுத்த 18 மாதங்களில் போயிங் விமானங்களை ஆர்டர் செய்யும் அளவுக்கு நிதிரீதியாக வலுவாக உள்ளது என்று அதன் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வினய் துபே தெரிவித்தார்.
ஆகாசா ஏர் நிறுவனத்தில் சுமார் 45 சதவீத பங்குகளை வைத்திருந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஞாயிற்றுக்கிழமை காலமானதைத் தொடர்ந்து புதன்கிழமை துபே செய்தியாளர்களைச் சந்தித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி 72 மேக்ஸ் விமானங்களை வாங்குவதற்கு போயிங் நிறுவனத்துடன் ஆகாசா ஏர் தனது முதல் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்றும் இன்று வரை மேற்கூறிய 72 விமானங்களில் மூன்றை விமான நிறுவனம் பெற்றுள்ளது என்று துபே தெரிவித்தார்.
ஆகாசா ஏர் தனது விமானங்களை ஆகஸ்ட் 7 அன்று மும்பையில் இருந்து அகமதாபாத் வழித்தடத்தில் இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.