5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்.. மீதி தொகை செலுத்த 20 ஆண்டுகள் தவணை
இந்தியாவின் மூன்று தனியார் வயர்லெஸ் ஆபரேட்டர்களான பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடஃபோன் இந்தியா ஆகிய நிறுவனங்கள் 5 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான முன்பணமாக ₹17,855 கோடியை செலுத்தியுள்ளனர்.
புதன்கிழமை, பார்தி ஏர்டெல் லிமிடெட், தொலைத்தொடர்புத் துறைக்கு ₹8,312.4 கோடியைச் செலுத்தியதாகக் கூறியது, அதன் போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் முதல் ஆண்டு தவணை ₹7,864 கோடியை மட்டுமே டெபாசிட் செய்தது, அதே போல் வோடபோன் ஐடியா ₹1,679 கோடியை செலுத்தியது,
அலைக்கற்றைக்கு ஏலம் எடுத்த ₹1.5 டிரில்லியனை செலுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அரசாங்கம் 20 ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ளது.