நீண்ட கால முதலீட்டிற்கு தங்கப் பத்திரம்
தங்கப் பத்திரத் திட்டத்தின் (SGB) 2021-22 ஆம் ஆண்டிற்கான வெளியீட்டு விலை கிராம் ஒன்றிற்கு ₹5,197 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு சந்தாவிற்கு இத் திட்டம் திறந்து இருக்கும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருக்கிறது.
அந்த அறிக்கையில் குறைந்த பட்சம் 1 கிராம் அளவில் முதலீடு செய்யலாம், வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் NSE, BSE மூலம் தங்கப் பத்திரங்கள் விற்கப்படும். பத்திரத்தின் தவணைக்காலம் 8 வருட காலம் ஆகும். 8 வருட காலம் காத்திருக்க விருப்பமில்லாதவர்கள் 5 வது வருடத்திற்குப் பிறகு வெளியேறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தனிநபர்களுக்கான அதிகபட்ச சந்தா வரம்பு 4 கிலோ, HUF க்கு 4 கிலோ மற்றும் அறக்கட்டளைகளுக்கு 20 கிலோகிராம்வரை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு கிராமுக்கு ₹50 தள்ளுபடி வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது