கோதுமை பற்றாக்குறை உண்மையா? பொய்யா?
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்த போது, உலகிற்கே உணவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த 4 மாதங்களுக்கு உள்ளாகவே, இந்தியா தன்னுடைய தேவைக்கு தானியங்களை இறக்குமதி செய்தாக வேண்டிய நிலை உள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக கோதுமை இறக்குமதியின் தேவையை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, இந்தியாவிடம் போதுமான அளவில் கோதுமை கையிருப்பில் இருப்பதாகவும், இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவித்தது. இந்நிலையில், அடுத்த சில நாட்களிலேயே, உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை மாவு ஏற்றுமதிக்கு மத்திய கட்டுப்பாடு விதித்துள்ளது. ரஷ்யா உக்ரேன் போரால் உலக நாடுகளில் கோதுமை தேவை தொடர்ந்து அதிகரித்தது.
இதையடுத்து இந்தியாவின் தேவைக்கு போதுமான கோதுமை கிடைக்கும் வகையில், தனிநபர்கள் கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு மே மாதம் தடை விதித்தது. இந்த நிலையில், கோதுமை மாவு தேவை அதிகரித்ததால், இந்தியா செய்த கோதுமை ஏற்றுமதி 200 சதவிதம் அதிகரித்தது. இது உள்ளூர் சந்தைகளில் கோதுமை பற்றாகுறைக்கு வழி வகுத்து, அதன் விலை அதிகரிக்க வழிவகை செய்தது. இதன் காரணமாக, உள்ளூர் சந்தையில் கோதுமைய்யின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.