மீண்டும் அனில் அம்பானியா?
1995ம் ஆண்டு அப்போதைய ரிலையன்ஸ் குழுமத்தால் தொடங்கப்பட்ட நிறுவனம் ரிலையன்ஸ் பவர். பின்னர் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி சகோதரர்களுக்கு சொத்துக்களை பிரித்து கொடுக்கும் போது, ரிலையன்ஸ் பவர் நிறுவனம் அனில் அம்பானிக்கு வழங்கப்பட்டது. துவக்கத்தில் அட்டகாசமாக இயங்கிய நிறுவனம் காலப்போக்கில் கடும் கடனில் சிக்கி தவிக்கிறது. இந்நிலையில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் varde partners என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
அதன்படி ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வாங்கியுள்ள கடனுக்கான தொகையான 1,200 கோடி ரூபாயை varde அளித்துவிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதே நிறுவனம் கடந்த 2021 ம் ஆண்டு ரிலையன்ஸ் infra நிறுவன சொத்துகளை 550 கோடி கொடுத்து வாங்கியது. புதிய அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் பங்குச்சந்தைகளில் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள் நல்ல விலையேற்றம் கண்டன. மீண்டும் அதன் விலை அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், இதன் செயல்பாடுகள் இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பதை கவனிக்க வேண்டியது மிக முக்கியாக உள்ளது.