வாட்ஸ் ஆப்பில் இது புதுசு!!!
கிட்டத்தட்ட எல்லா ஸ்மார்ட் போன்களிலும் தவிர்க்க முடியாத ஒரு ஆப்பாக உள்ளது வாட்ஸ் ஆப். சீரான இடைவெளியில் புதுமைகளை புகுத்தி, தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வரும் வாட்ஸ் ஆப் புதிய வசதியை பரிசோதித்து வருகிறது.
குறிப்பிட்ட ஒரு சாட்டிங்கில் உள்ள தரவுகளை தேதியை மட்டும் வைத்து தேடும் வசதியை வாட்ஸ் ஆப் சோதித்து வருகிறது. இந்த வசதியை 2020ம் ஆண்டே வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த்து. எனினும் சற்று தாமதமாக விரைவில் இது பயன்பாட்டுக்கு வருகிறது.
இந்த வசதியின்படி, குறிப்பிட்ட நபரிடம் நாம் செய்த சாட்டிங்கின் தேதி மட்டும் நினைவிருந்தால் போதுமானது. அந்த தேதியை சர்ச் பாரில் தேடினால் சாட்டிங் விவரங்களை எளிதில் தேடிக்கொடுக்கும் வகையில் இந்த புதிய வசதி அமைய உள்ளது. இது வாட்ஸ்ஆப் பயனாளர்கள் இடையே வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் இந்த தேடும் வசதி ஐபோன்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் பின்னர் படிப்படியாக ஆண்டிராய்டு செல்போன்களுக்கும் கிடைக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.