அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தினால் என்னாகும்?
அமெரிக்காவுல பொருளாதார மந்தநிலை மிகவும் ஆபத்தான கட்டத்த எட்டியிருக்கிறது என்றால் மிகையல்ல.. இந்த நிலையில்தான் அமெரிக்க பெடரல் ரிசர்வ் மத்திய வங்கிகளோட வட்டி விகத்த்தை உயர்த்த இருப்பதாக போன மாதமே அறிவித்திருந்தது. இதனால் அமெரிக்க முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்காவில் உள்ள தொழில் துறைக்கும் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு பணவீக்கத்தை கட்டுப்படுத்த இத்தகைய நடவிக்கைகள் தவிர்க்க முடியாது என்று சிலர் கூறி வந்தாலும், இந்த முறையும் 100 அடிப்படை புள்ளிகள் வட்டி உயர்த்தும்பட்சத்தில், பணியாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்,
இத்தகைய சம்பவங்களைத் தொடர்ந்து வீடுகள், கார்கள் விற்பனையும் சரிந்து போகும்.., இதனால் அமெரிக்காவில் 1980களில் நிலவிய பொருட்கள் தட்டுப்பாடு நீடிக்கும் என்றும் அமெரிக்க நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இத்தனை எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித்த்தை உயர்த்தும்பட்சத்தில் பங்குச்சந்கதைகளில் மிகப்பெரிய தாக்கம் உண்டாக உள்ளது. இதன் பிரதிபலிப்பு இந்தியாவிலும் இருக்கும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.