தொடர்ந்து சரியும் கையிருப்பு!!!
மத்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பணம் குறித்த நிலை அறிக்கையை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிற நாடுகளின் பணம் கடந்த 23ம் தேதி வரை 537.51 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அளவு இதற்கு முன்பு இருந்ததை விட 8.1 பில்லியன் குறைவாகும்.
நாட்டில் உள்ள வெளிநாட்டு பண கையிருப்பு குறைந்துள்ளதன் மூலம் FCAஎனப்படும் வெளிநாட்டு பண சொத்து மதிப்பு 477பில்லியன் டாலராக சரிந்துள்ளது
அதேபோல தங்கத்தின் அளவும் குறைந்துள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 37.88 பில்லியனாக குறைந்துள்ளது. இந்த அளவு முன்பு இருந்ததைவிடவும் 300 மில்லியன் டாலர் குறைவாகும். சிறப்பு உரிமைகள் எனப்படும் SDRகளின் மதிப்பும் 17.594 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது இதற்கு முன்பிருந்த மதிப்பை விடவும் 93 மில்லியன் குறைவாக உள்ளது
சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பு மிக்க பட்டியலிலும் இந்தியாவின் நிலை குறைந்துள்ளது. அதாவது 54 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி குறைந்து 4.286 பில்லியன் ஆக குறைந்திருக்கிறது.