ரிசர்வ் வங்கியின் புதிய யோசனை..
இந்திய ரிசர்வ் வங்கி என்பது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் மிக முக்கியமான கண்காணிப்பு அமைப்பாகும். இந்த அமைப்பின் கண்காணிப்பையும் மீறி சில நேரங்களில் நிதி நிறுவன முறைகேடுகள் நடைபெறுவது உண்டு. இந்த சூழலில் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களை கண்காணிக்கவும்,புள்ளி விவரங்களை சரியாக ஆய்வு செய்யவும் செயற்கை நுண்ணறிவு, மற்றும் மிஷின் லர்னிங் நுட்பங்களை ரிசர்வ் வங்கி பயன்படுத்த இருக்கிறது.
இதற்கென துறைசார்ந்த நிபுணர்களின் உதவியையும் ரிசர்வ் வங்கி நாடியுள்ளது. உலகளவில் மிஷின் லர்னிங் நுட்பத்தில் சூப்பர்டெக் மற்றும் ரெக்டெக் ஆகிய நுட்பங்கள் பிரபலமானவை, அதற்கு சவால் அளிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கியும் களமிறங்கியுள்ளது. முதல்கட்டமாக கூட்டுறவு வங்கிகள்,நிதிநிறுவனங்கள்,கடன்கள் குறித்த தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. இந்த தரவுகளை வைத்து பிற பகுப்பாய்வும் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. எந்த மாதிரியான பாதகங்கள், எந்த வகை ரிஸ்குகள் வரும் என்பது குறித்து கணிக்க இந்த வகை தொழில்நுட்பங்கள் உதவும் என்பதால் ரிசர்வ் வங்கி கண்காணிப்புக்கு பேருதவியாக இருக்கும் என்பது தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்தாக உள்ளது