தலைவன் வேற ரூட்ல வரான்!!! சூடுபிடிக்கும் 5ஜி!!!
இந்தியாவில் 5ஜி சேவையை தொலைதொடர்பு நிறுவனங்கள் அளிக்கத் தொடங்கியுள்ள நிலையில் ,5ஜி சேவையை கடைக்கோடி பொதுமக்கள் வரை கொண்டு சேர்ப்பதற்கான பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் இந்தியாவில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக உள்ள ஜியோ நிறுவனம், நோக்கியாவுடன்
கைகோர்த்துள்ளது.
5ஜி சேவையை பரவலாக்க தேவைப்படும் உபகரணங்களை நோக்கியா நிறுவனம் தயாரிக்க
உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த புதிய ஒப்பந்தத்தின்படி 5ஜி அலைக்கற்றைக்கான ரேடியோ அக்சஸ்நெட்வொர்க்கிற்கு தேவையான அனைத்து வன்பொருட்களையும் நோக்கியா நிறுவனம்
தயாரிக்க உள்ளது பிரமாண்ட் மிமோ ஆண்டினாக்கள்,ரிமோட் ரோடியோ ஹெட்ஸ் ஆகியவற்றையும்ஜியோவுக்கு நோக்கியா உற்பத்தி செய்து தர உள்ளது இந்தியாவில் பல ஆண்டுகளாக பிரபலமான நோக்கியாவுடன் கைகோர்த்துள்ளதால்,
தரமான 5ஜி சேவையை அளிக்க முடியும் என்று ஜியோ நிறுவனத் தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.வேற லெவல் கூட்டணியுடன் களம்கண்டுள்ள ஜியோ நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ளது.