எங்களை மன்னிச்சிருங்க!!
இந்தியாவில் பல மாநிலங்களில் வாட்ஸ் ஆப் செயலி பகல் 12 மணிக்கு மேல் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்தது
இதனால் அந்த செயலி பயன்படுத்துவோரால் 2 மணி நேரம் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியாமல் போனது
உலகளவில் வாட்ஸ் ஆப் அதிகம் பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் முதல் 5 இடங்களில் இந்தியா உள்ள நிலையில்
தீபாவளி நேரத்தில் இந்தியர்கள் பலரும் அதிகளவில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சர்வர்களில்
கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பலரும் தங்கள் ஆதங்கங்களை டிவிட்டர் வாயிலாக பதிவிட்டுள்ளனர். வாட்ஸ் ஆப் பிரச்சனை குறித்து
தெரியாமல் பலரும் தங்கள் போன்களை மீண்டும் மீண்டும் ரீஸ்ஸ்டார்ட் செய்து வந்ததாக பதிவிட்டுள்ளனர். இரண்டு
மணி நேரத்துக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் வாட்ஸ் ஆப் செயலி பழையபடி இயங்கத் தொடங்கியது
இந்த சேவை பாதிப்புக்காக மெட்டா நிறுவனம் வருத்தம் தெரிவித்தது.
இந்தியாவில் மட்டும்தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது என்று பார்த்தால்,இல்லை உலகளவில் மிக நீண்ட நேரம்
வாட்ஸ் ஆப் செயலி இயங்க வில்லை என்று கூறப்படுகிறது.வாட்ஸ் ஆப் வரலாற்றிலேயே இதுதான் அதிகநேர சேவை இழப்பு
என்கிறார்கள் ஆய்வாளர்கள். 2014 ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் செயலியை வாங்கியிருந்தது. அன்று முதல்
இன்று வரை பல காலகட்டங்களில் வாட்ஸ் ஆப் சேவை முடங்குவதும்,பின்னர் சீரடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.