2 ஆண்டுகளில் இல்லாத சரிவு….
ஒரு நாட்டில் எப்போதும் சொந்த நாட்டு பணம் எவ்வளவு இருக்கிறதோ,அதற்கு நிகராக கணிசமான வெளிநாட்டு பணத்தை
கையிருப்பில் வைப்பது அந்தந்த நாடுகளின் ரிசர்வ் வங்கிகளின் கடமையாகும்
இந்த நிலையில் கடந்த 21ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தின் நிதி கையிருப்பு குறித்த அறிக்கையை இந்திய
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தி வைக்க நிதி அமைச்சகம் , எத்தனையோ முயற்சிகளை எடுத்துக்கொண்டே உள்ளது. ஆனால் அது பலன்தரவில்லை.
நாட்டின் மொத்த வெளிநாட்டு பண கையிருப்பு 524.51 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது
இது கடந்த முறை வெளியிடப்பட்ட தொகையைவிடவும் 3.85 பில்லியன் டாலர் குறைவாகும்…அதாவது கடந்த ஜூலை 2020-ல் இருந்ததைவிட தற்போதைய அளவு சற்று குறைவாகும்.
தொடர்ந்து வெளிநாட்டு கையிருப்பு குறைந்து வரும் சூழலில் வெளிநாட்டு சொத்து மதிப்பு 465 பில்லியன் டாலராக சரிந்துள்ளது இதேபோல் தங்க கையிருப்பும் கரைந்துகொண்டே செல்கிறது.இந்தியாவின் தங்க கையிருப்பு 247 மில்லியன் டாலர் சரிந்து மொத்த கையிருப்பு 37 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வீழ்ந்துவிட்டது. இந்திய ரூபாயின் மதிப்பை
உயர்த்திப்பிடிக்க இதுவரை 100 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பணத்தை விரையமாக்கியுள்ளது, நடப்பாண்டில் மட்டும் இதுவரை 12விழுக்காடு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.