நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சி…விளக்குகிறது ரிசர்வ் வங்கி…
இந்தியாவில் விலைவாசி ஏற்ற இறக்கம், நிதி சூழல் உள்ளிட்டவை குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பதில்
ரிசர்வ் வங்கிக்கு மிகமுக்கிய பங்கு உண்டு, இந்த நிலையில் கடந்த 3 காலாண்டுகளாக விலைவாசி உயர்வு
பணவீக்கம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த முடியாமல் ரிசர்வ் வங்கி தடுமாறி வருகிறது.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு கூட்டம் வரும் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்
கடந்த 9 மாதங்களில் எங்கு கோட்டைவிட்டோம், ஏன் விலைவாசி குறையவில்லை உள்ளிட்ட நாட்டின் மிகமுக்கிய
பிரச்னைகளை இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளனர். வழக்கமான நிதி கொள்கை கூட்டம் மட்டுமின்றி, கூடுதலாக ஒரு அமர்வை நடத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது நாட்டின் சில்லறை பணவீக்க விகிதம் 4 விழுக்காடாக இருக்க வேண்டிய நிலையில் தற்போது அது ஏன் கட்டுக்குள் இல்லை என்பது பற்றியும், பிரதான காரணங்களையும் இந்த குழு பட்டியலிட்டு மத்திய அரசுக்கு அறிக்கையாக அளிக்க உள்ளது கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் 6விழுக்காட்டுக்கும் அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி சிறப்பு கூட்டத்தை கூட்ட கடந்த 2016ம் ஆண்டு, 45zn என்ற பிரத்யேக விதி கொண்டுவரப்பட்டது.
அந்த விதி உருவாக்கப்பட்டதே தவிர அதற்கு பிறகு எந்த வித சிறப்பு கூட்டமும் கூட்டப்படவே இல்லை. புதிய விதிப்படி
கூடும் முதல் சிறப்புக்கூட்டம் நவம்பர் 3ம் தேதி கூட இருக்கிறது. விலைவாசி உயர்வு குறித்து தரவுகள் வெளியான 1 மாதத்திற்குள் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அறிக்கை அளிக்க வேண்டும் என்ற நிலையில் வரும் 12ம் தேதிக்குள் புதிய அறிக்கை அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே என்ன பிரச்னை என்பது பற்றிதான் அதிகம் விவாதிக்க வாய்ப்புள்ளதாகவும், புதிதாக வட்டிக்கடன் விகிதங்கள் உயர்த்துவது பற்றி பெரிதாக பேசப்படாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு புதிதாக கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும்பட்சத்தில் அது சந்தையில் தேவையில்லாத குழப்பத்தை
ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான ரெபோ வட்டி விகிதம் தற்போது வரை 5.90%ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.