டாலர் வேண்டாம்!!! ரூபாயை கொடு!!!
உலகின் வர்த்தகம் அனைத்தும் அமெரிக்க டாலர்களை நம்பியே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக புதிய முறை குறித்து யோசித்து வருகிறது., அதன்படி அமெரிக்க டாலரை நம்பி இல்லாமல், இந்திய ரூபாயிலேயே வணிகத்தை நடத்திக் கொள்ளாலம். இந்தி திட்டத்துக்கு பல நாடுகள் இசைவு தெரிவிக்கின்றன என்று ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய ரூபாயை உலகளவில் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த செயல்பாடு கடந்த ஜூலை மாதம் முதல் பரவலாக்கப்பட்டுள்ளது உலகில் பல நாடுகளிலும் இந்திய ரூபாய் பிரபலமாகும் பட்சத்தில் இந்திய ரூபாயின் பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு பண பரிவர்த்தனை முகவர்கள் நடத்திய நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரபி சங்கர் பங்கேற்றார். உலகில் பல நாடுகளிலும் இந்திய ரூபாய் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் அது இந்திய ரூபாயை மிகவும் வளமாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி சீர்திருத்தத்தால் மட்டுமே இந்திய ரூபாயை உலகளவில் பிரபலமாக்க முடியாது என்று கூறியுள்ள ரபி, இந்திய ரூபாயை சர்வதேச மயப்படுத்துவதற்கும் ரூபாயை வெளிநாட்டு பணமாக கருதுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்றும் ரபி குறிப்பிட்டார். உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவது நல்ல பலன் தருவதாகவும், நடப்புக்கணக்கில் இந்திய ரூபாயை பயன்படுத்துவதால் முதலீடுகளும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.