இந்தியாவில் கடையை மூடும் ஜியோமி…
இந்தியாவில் பலரும் பயன்படுத்தும் செல்போன்களில் ஜியோமி செல்போனுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு, குறிப்பிட்ட இந்தபோனில் நிதி சேவை சார்ந்த வணிகம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த நிலையில் அதை தற்போது நிறுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. சிக்கன நடவடிக்கை மற்றும் முக்கிய வணிகத்தில் கவனம் செலுத்த உள்ளதால் ஜியோமி பைனான்சியல் சேவைகளை கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மீபே ஆப் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. ஆனால் அந்த குறிப்பிட்ட செயலி ரசிர்வ் வங்கி, யூபிஐ மற்றும் என்பிசிஐ ஆகிய அமைப்புகளால் அங்கீகரிக்கப்படவில்லை மீ பே செயலியைப் போலவே, மீ கிரிடிட் என்ற கடன் செயலியும் நீக்கப்பட்டுள்ளது.
சீன கடன் செயலிகள் இந்தியாவில் வரிஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் எழுந்த நிலையில். சீன நிறுவனமான மீயின் கிரிடிட் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் ஜியோமி நிறுவனத்தின் கணக்குகளை மத்திய அரசின் துறை சார்ந்த அதிகாரிகள் முடக்கியுள்ளனர். சட்டவிரோதமாக வைக்கப்பட்ட செயலிகள் தற்போத நீக்கப்பட்டுள்ளன.ஆனால் தங்கள் நிறுவனம் எந்த வித தவறையும் செய்யவில்லை என்று ஜியோமி நிறுவனம் விளக்கியுள்ளது. 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சீனாவைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட செயலிகளை மத்திய அரசு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.