ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை…
இந்தியாவில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் துறையாக ஃபின் டெக் எனப்படும் டிஜிட்டல் முறையில் கடன் அளிக்கும்
வசதி உள்ளது. குறிப்பிட்ட இந்த துறையில் கடன் அளித்துவிட்டு வாடிக்கையாளர்கள் புகார்களை கவனமுடன் நியாயமான
முறையிலும் நடந்துகொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிதி நிறுவன சிக்கல்களுக்கு தீர்வு காணும் உயரிய அமைப்பான ரிசர்வ் வங்கியின் ஓம்புட்ஸ்மேன் அமைப்பின் கருத்தரங்கு ராஜஸ்தானில் நடைபெற்றது. ஜோத்பூரில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சக்தி காந்ததாஸ் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், வாடிக்கையாளர் ஒரு புகாரை ஓம்புட்ஸ்மேன் அமைப்புக்கு எடுத்து வருகிறார் என்றால் அதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை நிதி நிறுவனங்களும் ஓம்புட்ஸ்மேன் அமைப்பும் ஆராய வேண்டும் என்றார், அதேபோல் புகார் அளித்தவருக்கு நீதியும், சரியான நேரத்தில் நடவடிக்கையும் தேவை என்றார்.
டிஜிட்டல் முறையில் கடன்தருவது அதிகமாக வளர்ந்துவிட்ட போதிலும், வாடிக்கையாளர்கள் சேவையில் நிதானம் வேண்டும் என்றும் நேர்மையான சேவையை அளிக்க வேண்டும் என்றும் சக்தி காந்ததாஸ் கேட்டுக்கொண்டார்.
டிஜிட்டல் முறையில் பணத்தை கடனாக அளித்துவிட்டு தற்போது அதனை வசூலிப்பதில் அடியாட்களை பயன்படுத்துவதை சுட்டிக்காட்டி பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர்,வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியம் என்றார் டிஜிட்டல் முறையை விட பழைய முறையிலேயே இன்னும் அதிகளவு புகார்கள் வந்து குவிவதாகவும் அவர் தெரிவித்தார். அடிப்படை பிரச்சனைகள்
குறித்து ஆராய வேண்டியது மிகவும் அவசியம் என்றும்,தொழில்நுட்பத்தை சரியான நேரத்தில் புரிந்து கொண்டு வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.