மாதம் 1600 ரூபாய் கட்டணம்!!!
டிவிட்டர் நிறுவனத்தில் கணக்கு வைத்திருந்தவர்களில் அனைவருக்கும் புளூ டிக் கிடைப்பதில்லை..குறிப்பிட்ட ஒரு சில துறை சார்ந்த பிரபலங்களுக்கு மட்டுமே புளூ டிக் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் புளூ டிக் முறைக்கு மாதந்தோறும் சந்தா செலுத்தும் முறையை மஸ்க் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட நபர்கள் மாதந்தோறும் சுமார் 5 அமெரிக்க டாலர்கள் செலுத்தவேண்டும் அவ்வாறு பணம் செலுத்த தவறும் பட்சத்தில் அவர்களின் புளூ டிக் மார்க் பறிபோய்விடும் எனினும் டிவிட்டரை புதிதாக வாங்கியுள்ள முதலாளியான எலான் மஸ்க், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இந்த சூழலில் டிவிட்டரில் தற்போது வரை எடிட் என்ற வசதி இல்லாமல் உள்ளது. அதனை கொண்டுவரலாமா என்று அண்மையில் எலான் மஸ்க் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். அதில் 70 விழுக்காடு மக்கள் டிவிட்டரில் எடிட் என்ற பட்டன் வசதியை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். டிவிட்டரில் இருந்து லாக் அவுட் ஆகிவிட்டு மீண்டும் வரும்போது, எக்ஸ்புளோர், டிரெண்டிங்கில் உள்ள உள்ளடக்கங்கள் குறித்த தகவல்கள் முதல் பக்கத்தில் தெரியவரும் என்று மஸ்க் குறிப்பிட்டுள்ளார். எலான் மஸ்க்கின் இந்த அதிரடி மாற்றங்களால் டிவிட்டர் சமூக வலைதளம் புதிய மாற்றங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புளூடிக் வைத்திருப்பவர்கள் ஒன்றும் ஏழைகள் இல்லை என்றும், அவர்களிடம் வெறும் 5 டாலர் வசூலிப்பது தவறில்லை என்று ஒரு தரப்பும் புளூ டிக் வசதியால் வேறு என்ன கிடைத்து விடப்போகிறது என்று மற்றொரு தரப்பும் விவாதித்து வரும் நிலையில் இணையத்தில் டிவிட்டர் புளூடிக் பேசுபொருளாகியுள்ளது.