வேலையைவிட்டும் தூக்கமாட்டோம்.., புதுசாவும் எடுக்கமாட்டோம்.. நாங்க வேற மாதிரி!!!!!
உலகின் பெரிய ஜாம்பவான் நிறுவனங்களான பேஸ்புக்,அமேசான் மற்றும் டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் ஆயிரக்கணக்கில் பணியில் இருந்து நிறுத்திவிட்டனர். இந்த சூழலில் பிரபல வலைதளமான லிங்குடு இன் நிறுவனத்தின் சிஇஓ செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர் தங்கள் இணையதளம் வாயிலாக மக்கள் அதிகம் படிப்பதாகவும், அதிகம் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார் இந்தியாவில் லிங்க்டு இன் பயன்படுத்தவோர் எண்ணிக்கை கணசிமாக இருப்பாத ஒப்புக்கொண்ட அந்நிறுவனம், வருவாய் பாதிக்கும் அதிகமாக உள்ளது. இந்தியர்கள்தான் லிங்குடு இன் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றி வருவதாகவும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 9 கோடியே 70 லட்சம் பேர் லிங்கிடு இன் செயலியை பயன்படுத்தி வரும் சூழலில் அதில் பெரும்பாலானோர் இந்தியர்களாக உள்ளனர். இந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் தற்போது புதிதாக ஆட்களை எடுக்கப் போவதும் இல்லை, நிதி சிக்கலை காட்டி இன்னும் ஆட்களை குறைக்கப் போவதும் இல்லை என்று அறிவித்துள்ளது. முன்னணி தகவல் நுட்ப நிறுவனங்களும் லிங்குடு இன் மூலமாக தங்கள் நிறுவன பணியாளர்களை வீட்டில் இருந்து புதிய திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவுவதாக கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மாறி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக தங்கள் நிறுவனம் ஏதும் முடிவெடுக்கவில்லை என்றும் லிங்குடு இன் நிறுவனம் தெரிவித்துள்ளது.