நாயகன் மீண்டும் வரான்!!!! உள்ளே, வெளியே ஆட்டம் !!!!
S&P மும்பை பங்குச்சந்தையில் சிறுமாற்றங்கள் செய்யப்படுவதாக ஏசியா இன்டக்ஸ்பிரைவேட் நிறுவனம் கடந்த 18ம் தேதி அறிவித்துள்ளது இதன்படி சென்செக்ஸில் இருந்து முக்கிய மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் நீக்கப்படுகிறது. முக்கியமான 30 பங்குகளின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் வரும் டிசம்பர் மாதம் 19ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதேபோல் S&P BSE 100,S&P BSE next 50 ஆகிய சந்தைகளில் அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் நீக்கப்பட உள்ளது. இந்துஸ்தான் பெட்ரோலியமும் நீக்கப்பட உள்ளது.இதற்கு பதிலாக அதானி பவர் மற்றும் இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட உள்ளது. தற்போதுள்ள S&P BSE sensex 50,S&P BSE BANKEX குறியீடுகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முக்கியமான 30 பங்குகளில் டாடா மோட்டார்ஸ் சேர்ந்துள்ளது முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை மும்பை பங்குச்சந்தையில் 435 ரூபாயாக உள்ளது புதிதாக சேர்க்கப்பட உள்ள அதானி பவர் மற்றும் இந்தியன் ஹோட்டல்ஸ் ஆகிய நிறுவன பங்குகளின் விலையும் குறைந்திருக்கிறது.