ஐபோன் 15 குறித்த UPDATE.!!!
உலகளவில் மிகப்பெரிய பிராண்டாகவே பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் ஆப்பிள் நிறுவனத்தில் இதுவரை ஐபோன் 14 மட்டுமே விற்கப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ஐபோன் 15 சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் 15 செல்போன்கள் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளன.சீனாவில் இருந்து நடையை கட்டிய ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க ஆர்வம் காட்டி வருகிறது. ஆப்பிள் நிறுவன செல்போன்களின் விற்பனை கடந்த சிலமாதங்களாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் குறைந்து வருகிறது. மேலும் கடந்த3 ஆண்டுகளாக ஐபோன்களின் கேமிரா வடிவமைப்பில் எந்த பெரிய மாற்றங்களும் செய்யப்படவில்லை.எனவே இந்தாண்டு வெளியாக உள்ள ஐபோன் 15 செல்போன்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐபோன் 15 உற்பத்தி அதிகப்படுத்துவது என்பது கிடைக்கும் உதிரி பாகங்களின் அடிப்பையில்தான் இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.இந்தியாவில் இருந்து 7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஐபோன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.உலகின் பலநாடுகளிலும் ஐபோன் விற்பனை சரிந்துள்ள நிலையில் இந்தியாவில் இதன் விற்பனை இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவுக்கு வந்த டிம்குக்,ஆப்பிள் நிறுவன கடையை திறந்து வைத்து பல்வேறு தரப்பினருடன் ஆலோசனையிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.