புதிய தொலைதொடர்பு சட்டம் தெரியுமா?
தொலைதொடர்புத்துறை சட்டம் அண்மையில் கொண்டுவரப்பட்டது. இதில் 30 விதிகளை மாற்றி அமைக்கும் பணிகளில் தற்போது மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதில் அலைக்கற்றை ஒதுக்கீடு, தொலைபேசி குறுக்கீடு, உயிரி தரவுகளை சேகரிக்கும் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட இருக்கிறதாம். ஏற்கனவே கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், அதனை அரசிதழ்களில் ஆணையாக வெளியிடும் பணிகளும், அறிவிப்புகளாக வெளியிடும் பணிகளும் மட்டுமே மிச்சம் இருக்கிறதாம். இந்த புதிய விதிகளை வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அப்படி தவறினால் பொதுத்தேர்தலுக்கு பிறகே புதிய விதிகள் அமலாகும் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. அவை நடவடிக்கைகளில் இந்த தரவுகள் கொண்டுவரப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆட்சேபமும் பரிசீலிக்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. the Indian Telegraph Act, 1885, the Indian Wireless Telegraphy Act, 1933, and the Telegraph Wires (Unlawful Possession) Act, 1950 ஆகிய 3 சட்டங்களை அடிப்படையில் மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு மிகமுக்கியமாக பார்க்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Bharti Oneweb, Starlink, Amazon Kuiper, Reliance Jio Satellite ஆகிய நிறுவனங்களுக்கு செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கப்பட இருக்கிறது. பொதுமக்கள் அதிப்படியான அலைக்கற்றை மற்றும் சிம்கார்டு உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவே புதிய மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. மிகவும் முக்கியமான, ரகசிய தரவுகளை பாதுகாப்பது தொடர்பாகவும் புதிய விதிகள் வகுக்கப்பட இருக்கின்றன.