கம்மி விலையில் புல்லட்டா?
டுபுடுபுவென சப்தம் போடும் புல்லட்டில் வர யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் என்ன செய்வது புல்லட்டின் குறைந்தபட்ச விலையே ஒன்றரை லட்சம் ரூபாயாக அல்லவோ இருக்கிறது. இந்நிலையில் புல்லட் பிரியர்களின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில் புதிய முயற்சியை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. சோதனை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில டீலர்கள் மட்டுமே பயன்படுத்திய புல்லட்டுகளை மீண்டும் விற்க உரிமம் பெற இருக்கின்றனர்.
இந்த திட்டத்துக்கு ரீ ஓன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பழைய புல்லட்டுகளை கொடுத்துவிட்டு புதிய புல்லட்டுகளை கூட தரம் உயர்த்த பணிகள் நடக்கின்றன. ராஜஸ்தானில் பயன்படுத்திய புல்லட்டுகளை விற்பதற்காகவே பிரத்யேக ஷோரூம் ஒன்று இயங்கி வருவதாக ராயல் என்ஃபீல்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரியான கோவிந்தராஜன் தெரிவித்தார். பயன்படுத்திய புல்லட்களை வாங்கி விற்க உள்ள சந்தையில் நடுவில் இருக்கும் நபர்களை களையும் முயற்சியாக ரீ ஓன் என்ற திட்டம் இருக்கும் என்று கோவிந்தராஜன் தெரிவிக்கிறார். சின்னச்சின்ன கடைகளாலேயே நல்ல லாபம் பார்க்க முடிகிறது என்ற பட்சத்தில் நாம் ஏன் அதை செய்து குறைந்த விலையில் என்பீல்டு புல்லட்டுகளை மக்களுக்கு தரக்கூடாது என்றும் அந்நிறுவன அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த சந்தை அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் லாபகரமாக மாற வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக புதிய புல்லட் 100ரூபாய்க்கு விற்கப்படுகிறது எனில், பழைய புல்லட்டுகள் 40 ரூபாய்க்கு கிடைக்கும் என்பதால் இந்த சந்தை மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்கிறார்கள் இருசக்கர வாகன விற்பனையாளர்கள் ஒருங்கிணைந்த வகையில் இருக்கும் வியாபாரம் என்பது சந்தையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள்