பேடிஎம்மை கைப்பற்றுகிறாரா அம்பானி…
ஜியோ நிதி நிறுவனத்தை அண்மையில் முகேஷ் அம்பானி தொடங்கியிருந்தார். இந்த நிறுவனத்துக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில் அண்மையில் விதிமீறல் புகார்களில் சிக்கியுள்ள பேடிஎம் வாலட் நிறுவனத்தை முகேஷ் அம்பானி வாங்கப்போவதாக தகவல் வெளியானது. இதனால் ஜியோ பைனான்சியல் நிறுவனத்தின் மதிப்பு 14 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. வர்த்தகத்தின் அதிகபட்ச தொகையாக 288 .75 ரூபாயாக ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. அம்பானியும், எச்டிஎப்சி நிறுவனமும் பேடிஎம் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியது. ஏற்கனவே கடந்த நவம்பரில் பேச்சுவார்த்தை நடந்ததை விஜய் ஷேகர் சர்மாவும் உறுதி செய்திருக்கிறார். லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் கேஒய்சி என்ற விவரங்களை பொய்யாக பேடிஎம் நிறுவனம் சேகரித்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. அமலாக்கத்துறை விசாரணை நடப்பதாக வெளியான தகவலை பேடிஎம் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் கடந்த 3 நாட்களில் 42விழுக்காடு வீழ்ந்திருக்கிறது. கடந்தாண்டு ரிலையன்ஸ் குழுமத்திடம் இருந்து விலகிய நிதிப்பிரிவான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம்,அண்மையில் பேடிஎம் போல ஜியோ, சவுண்ட் பாக்ஸ் என்ற புதிய பெட்டியும் ஜியோ நிறுவனம் தயார்படுத்தியுள்ளது. ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஜியோ இன்சூரன்ஸ், ஜியோ பேமன்ட்ஸ் பேங்க்,மற்றும் ஒரு சொத்து நிர்விகிக்கும் நிறுவனத்துக்கு ஜியோ பதிவு செய்திருக்கிறது.