22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

மறுபடியும் மொத்தல்ல இருந்தா??

இந்தியாவில் மிகப்பெரிய இரண்டு பொழுதுபோக்கு நிறுவனமான ஜீ மற்றும் சோனி இணைய ஒப்பந்தம் போட பட்டது. பின்னர் அந்த ஒப்பந்தம் பாதியில் நின்று போனது. இந்நிலையில் தனது முழு வணிக செயல்பாடுகளையும் ஜி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்த இருக்கிறது. விளையாட்டுத் துறை வணிகத்தை அதிக கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு விளையாட்டு சார்ந்த வணிகத்தில் ஜி நிறுவனம் கடந்த 2022இல் இறங்கியது. அதுவும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்பு செய்து காசு பார்த்தது. இருந்தாலும் கடந்த டிசம்பர் 31வரையிலான கால கட்டத்தில் 2045 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பை ஜி நிறுவனம் சந்தித்தது. Ebitda சரிந்தது, அதுபோல செலவும் 5%வரை அதிகரித்து உள்ளது . புதிய தொழில்நுட்பம், தரமான உள்ளடக்கம் ஆகியவற்றில், ஜி நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. ஆட்குறைப்பும் இருக்கலாம் என்றும் அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். டிவி மற்றும் ott இயங்கு தளங்களில் லாபம் பார்க்கவும் ஜி நிறுவனம் பணிகளை தீவிர படுத்தி வருகிறது. ஜி நிறுவனத்தின் 3ஆவது காலாண்டு வருமானம் நம்பிக்கை தரும் வகையில் 15%உயர்ந்தது.அந்நிறுவனத்தின் நஷ்டம் கடந்த காலாண்டில் 244கோடி ரூபாயாக குறைந்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *