ஏர் இந்தியா டிக்கெட் விலை மலிவாக கிடைக்கும்,ஆனால்…
டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் மலிவு விலையில் டிக்கெட்டுகளை அளிக்க முன்வந்துள்ளது. ஆனால் ஒரு கண்டிஷன்,அது யாதெனில் போதுமான பேகேஜ்கள் அதிகம் எடுத்துச்செல்லவில்லை என்றால் அவர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் லைட் என்ற வகையில் பயணிகள் மலிவு விலை விமான டிக்கெட்டுகளை பெறமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் செக் இன் மூலம் கியூ தேவைப்படாது. வழக்கமான அதிக எடை கொண்ட லக்கேஜுடன் பயணிப்போரை விட குறைவான விலையில் பயணிக்க முடியும். இந்த வகை வாடிக்கையாளர்கள் பிரீ புக்கிங் செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்பது ஏர் இந்தியாவின் துணை நிறுவனமாகும். 65 விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கொண்டுள்ளது. இதன் மூலம் 31 உள்நாட்டு முனையங்கள் மற்றும் 14 சர்வதேச விமான நிலையங்களை இணைக்க இயலும். இந்தியாவுக்குள் இலகுவாக பயணிக்க விரும்புவோருக்காக இந்த வசதி நிச்சயம் கைகூடும் என்று கூறப்படுகிறது. விமான பயணிகளை கவர புதுப்புது உத்திகளை விமான நிறுவனங்கள் களமிறங்கியுள்ள நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன அறிவிப்பு சந்தையில் நல்ல மதிப்பை பெற்று வருகிறது.