மீண்டும் வருகிறது ஃபோர்டு..
அமெரிக்க பிரபல கார் நிறுவனமான ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் காலடி எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளது. இந்த முறை வேறு வகையில் வருகிறதாம். அதாவது ஃபோர்ட் நிறுவனம் மீண்டும் இந்தியாவுக்குள் வர இருப்பதாகவும் அதுவும் மின்சார வாகன சந்தையுடன் குதிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் இந்தியாவில் குறிப்பாக சென்னையில் இருந்து ஃபோர்ட் நிறுவனம் வெளியேறியது. நடுத்தர எஸ்யுவி ரக கார்களுக்கு ஃபோர்ட் நிறுவனம் காப்புரிமைகளும் கோரப்பட்டுள்ளது. ஹியூண்டாய் கிரெட்டா, கியா செல்டாஸ்,மாருதி சுசுக்கி கிராண்ட் விட்டாரா ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த புதிய கார்கள் களம்காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எண்டேவர் எஸ்யுவியில் இந்த புதிய மாற்றம் இருக்கும் என்று தகவல் கசிந்திருக்கிறது. சென்னையில் உள்ள ஃபோர்ட் ஆலை மீண்டும் பணியாளர்களை பணிக்கு எடுப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மஸ்டேங்க் மாச் ஈ ரக கார்களுக்கு ஃபோர்ட் நிறுவனம் டிரேட்மார்க் வைத்திருக்கிறது. மெர்சீடீஸ் ஈகியூஈ, பிஎம்டபிள்யு ஐஎக்ஸ், மற்றும் ஆடி கியூ8 ஈ-டிரான் ஆகிய கார்களுக்கு போட்டியாக ஃபோர்டின் புதிய கார் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் உள்ள ஆலையை விற்க ஃபோர்ட் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஜேஎஸ்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்களும் ஃபோர்ட் ஆலையை வாங்க முன்வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வாங்கும் திட்டத்தை ஜேஎஸ்டபிள்யூ காலவரையின்றி ஒத்திவைத்ததாக கருதப்பட்ட நிலையில், ஃபோர்ட் நிறுவனம் ரீ என்ட்ரி தருவது அந்த வகை கார் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.