பொய் விளம்பர வழக்கு-சாட்டையை சுழற்றிய உச்சநீதிமன்றம்..
பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு கண்களை மூடிக்கொண்டிருப்பதாக உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. குறிப்பிட்ட ஒரு சில நோய்களை தீர்ப்பதாக பதஞ்சலி நிறுவனம் இனி விளம்பரம் செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கடுமையான வார்த்தைகளை முன்வைத்துள்ளது. போலியான விளம்பரம் செய்வதாக யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றன. இந்த வழக்குகள் நீதிபதிகள் அசானுதின் அமனுல்லா,ஹிமா கோலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தடையை மீறி விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனத்தின் மீது 2 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். எவிடன்ஸ் பேஸ் பொருட்கள் என்ற பெயரில் விளம்பரம் செய்யப்படுவது குறித்து பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் வழக்கு தொடர்ந்திருந்தது. பதஞ்சலி நிறுவனம் கூறும் எவிடன்ஸ் பேஸ்டு மெடிசன் என்பதில் இந்தியாவில் இந்திய மருத்துவ சங்கம் தான் இறுதி முடிவை எடுக்கும். அந்த சங்கத்தில் இந்தியாவில் 3.5லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றன. ஏற்கனவே போலியான விளம்பரம் செய்த வழக்கில் பதஞ்சலி நிறுவனம் போலியான விளம்பரங்களை எந்த ரூபத்திலும் செய்யக்கூடாது என்று கடந்த நவம்பரிலேயே உச்சநீதிமன்றம் எச்சரித்து இருந்தது. ஜனவரியில் பதஞ்சலி நிறுவனம் விதிகளை மீறமாட்டோம் என்று உறுதி அளித்திருந்தது.
அதனை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் மருத்துவர்களை கொலையாளிகள் போல சித்தரிப்பதா என்று பதஞ்சலி நிறுவனத்தை சரமாரியாக காய்ச்சி எடுத்துவிட்டது.