22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

சிம்கார்டு போல கிரிடிட் கார்டிலும் புது வசதி..

ரிசர்வ் வங்கி அம்மையில் கார்டு விநியோகிப்பவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான நெட்வொர்க்குக்கு மாறிக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.
வாடிக்கையாளர்களுக்கு போதுமான தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்று புகார் எழுந்த நிலையில் இந்த அறிக்கையை ரிசர்வ் வங்கி செய்திருக்கிறது. தற்போது வரை வங்கிகள் ஒரு கிரிடிட் கார்டு வழங்கினால் அது யாரின் நெட்வொர்க்கோ அதை மாற்ற இயலாத சூழல் உள்ளது. இதனை இனி மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி வகை செய்கிறது.
ஏற்கனவே கிரிடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அடுத்த ரினிவலின்போது வேண்டிய நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. American Express Banking Corp., Diners Club International Ltd., MasterCard Asia/ Pacific Pte. Ltd., National Payments Corporation of India–Rupay, and Visa Worldwide Pte. Limited. ஆகிய நெட்வொர்க்குகள் தற்போது சந்தையில் இருக்கின்றன. இந்த புதிய வசதி வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் அமலாகும்.அதாவது அறிவிப்பு வெளியானதில் இருந்து 6 மாதங்களுக்குள் இந்த புதிய விதி அமலாக உள்ளது. இதேபோன்ற ஒரு அறிக்கையை கடந்த ஜுலை 5 ஆம் தேதியே ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. 10 லட்சம் அல்லது அதற்கும் குறைவான கார்டு வைத்திருக்கும் வங்கிகளுக்கு இந்த வசதி கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட்வொர்க் என்றால் யாதெனில் வாடிக்கையாளரையும், வங்கியையும், வணிகர்களையும் பாதுகாப்பான பரிவர்த்தனை செய்ய வைக்கும் கார்டு நிறுவனங்களே இந்த இடத்தில் நெட்வொர்க் எனப்படுகிறது. இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமெனில் நாம் ஒவ்வொரு முறை கார்டை ஸ்வைப் செய்யும்போதும், பணப்பரிவர்த்தனைகளை இந்த நிறுவனங்கள்தான் செய்து முடிக்கின்றன. அதுவும் சில நொடிகளில்.
இந்தியாவில் ரூபே, விசா,மாஸ்டர்கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டைனர் கிளப் ஆகிய 5 நிறுவனங்கள்தான் அங்கீகரிக்கப்பட்ட நெட்வொர்க்குகளாக இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *