தொடர்ந்து 7ஆவது மாதமாக சரிவு..
உலகளவில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து 7 ஆவது முறையாக பிப்ரவரி மாதத்தில் சரிவை கண்டுள்ளன.
குறிப்பாக பருப்பு வகைகளின் விலை கடுமையாக வீழ்ந்துள்ளன. சர்க்கரை,இறைச்சி ஆகியவை விலை அதிகரித்து உள்ளதாக உணவு மற்றும் விவசாயத்துறை அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு முகமையாக உணவு மற்றும் விவசாயத்துறை அமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் உணவு விலை தரக்குறியீடு என்பது 0.7 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளது. அதாவது கடந்தாண்டில் இருந்ததை விட குறைந்து இந்த குறியீடு 10.5 விழுக்காடாக உள்ளது.
கடந்த மாதத்தில் பருப்பு வகைகளின் விலை மட்டும் 5 விழுக்காடு சரிந்துள்ளது. இது கடந்தாண்டில் இருந்ததை விட குறைந்து 22.4 விழுக்காடாக உள்ளது. தென் அமெரிக்கா மற்றும் உக்ரைனில் சோளம் அதிகம் விளைந்திருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கோதுமை மற்றும் அரிசியின் விலையும் கடுமையாக வீழ்ந்துள்ளன. காய்கனி எண்ணெய்களின் விலைகளும் பெரிய அளவில் சரிந்துள்ளன. இதற்கும் தென் அமெரிக்க நாடுகள்தான் காரணமாக கூறப்படுகிறது. சர்க்கரை மட்டும் 3.2விழுக்காடு விலை உயர்ந்திருக்கிறதாம். பிரேசிலில் கடும் வறட்சி நிலுவதால் கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இறைச்சி தரக்கு குறியீடு 1.8விழுக்காடு கடந்த மாதம் உயரந்திருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் சீனாவில் கனமழையால் கால்நடைகள் மற்றும் பன்றிக்கறிக்கான தேவை அதிகரித்துள்ளது. அதே நேரம் ஐரோப்பாவில் இதற்கான விநியோகம் குறைந்த அளவில் இருப்பதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக FAOஅமைப்பு தெரிவித்துள்ளது.