இந்தியாவில் அதிகரித்த இன்டர்நெட் பயன்பாடு..
இந்தியாவில் தற்போது வரை 82 கோடி பேர் இண்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் கிராமபுறங்களில் இருந்து பயன்படுத்துவது தெரியவந்திருக்கிறது. 2023-ல் மட்டும் இந்தியாவில் 8 விழுக்காடு அளவுக்கு இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நகரத்தை விட கிராமங்களில் அதிகரித்துள்ளனர். அதேநேரம் இந்தியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இணைய வசதியை பெறாமல் இருக்கின்றனர். கிராமங்களில் அதிகம் பேர் இணையத்தை பயன்படுத்தினாலும் நகரங்களில் பயன்படுத்துவோர் நேரம் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் ஆண்களைவிட பெண்கள் இணையத்தை பயன்படுத்தும் எண்ணிக்கை குறைவாக இருப்பது புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் வீடியோ மற்றும் ஆடியோ ஓடிடி தளங்களைத்தான் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனராம். இந்தியாவில் 5-ல் ஒருவர் டிவிக்கு பதிலாக ஆன்லைனில்தான் வீடியோவை பயன்படுத்தி வருகின்றனராம். இந்தியாவில் ஸ்மா்ட் டிவி,ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், ஃபயர் ஸ்டிக், கேமிங் சாதனங்களின் பயன்பாடு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்தாண்டு தரவுகளின்படி 4-ல் ஒருவர் ஆன்லைனில் பொருட்களை வாங்குகிறார் என்றால் அது சமூக வலைதளங்கள் வாயிலாகவே நடந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதேபோல் இந்தியாவில் கேஷ் ஆன் டெலிவரி மூலம் பொருட்களை வாங்குவோரின் விகிதம் வெறும் 26 விழுக்காடாகவே இருக்கிறது. மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகள் 8 விழுக்காடு அளவுக்கு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் டிஜிட்டல் தளங்களைத்தான் விரும்புகின்றனராம். உள்ளூர் மொழிகளில்தான் மக்கள் அதிகம் விவரங்களை தேடுகின்றனராம். அதேபோல் 4-ல் ஒரு நகர்புற இந்தியர் வாய்ஸ் கமாண்டுகளை மக்கள் செய்வதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.