1,70000 கார்களை திரும்பப் பெற்ற ஹியூண்டாய்,கியா..
இந்தியாவில் பிரபல கார் நிறுவனமாக உள்ள ஹியூண்டாய் கார் நிறுவனம் உண்மையில் தென்கொரிய நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமாக உள்ளது கியா மோட்டார்ஸ், இந்த இரு நிறுவனங்களும் தென்கொரியாவில் மிகவும் பிரபலமானவை, அந்நாட்டில் அண்மையில் இந்த நிறுவனங்கள் வெளியிட்ட மின்சார கார்களில் சிறு பிரச்சனை இருந்தது.
இதன் காரணமாக 1 லட்சத்து 69,332 மின்சார கார்களை அந்நிறுவனங்கள் திரும்பப்பெற்றன. 5 ரகங்களில் இந்த பிரச்சனை கண்டறியப்பட்டது. ioniq ,genesis, ரக மாடல்களும் இதில் அடங்கும். இதேபோல் கியா மோட்டார்ஸில் 56,016 கார்கள் திரும்பப்பெறப்பட்டன. சார்ஜிங் கண்ட்ரோல் யூனிட்டில் ஏற்பட்ட பிழையே இந்த சிக்கல்களுக்கு காரணமாக கூறப்படுகிறது. குறைவான மின்னூட்டத்தை பேட்டரிக்கு அனுப்பவதில் சிக்கல் இருந்ததால் வண்டி ஓடும்போதே திடீரென நிற்கும் வாய்ப்பு இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்ததால் இந்த கார்களை அந்நிறுவனம் திரும்பப்பெற முடிவெடுத்தது. வாடிக்கையாளர்களின் நலனே முக்கியம் என்று கூறியுள்ள அந்நிறுவனம், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பில் சமரசம் இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது. கார்களில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய அந்நாட்டில் வரும் 18 ஆம் தேதி முதல் ஹியூண்டாய், கியா நிறுவனங்கள் களமிறங்க இருக்கின்றன.