20 வாரங்களில் இல்லாத சரிவு..
இந்திய பங்குச் சந்தையில் கடந்த 20வாரங்களில் இல்லாத சரிவு காணப்படுகிறது. முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை குறைந்துள்ளது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.நடுத்தரம் மற்றும் சிறிய பங்குகள் சரிவை கண்டதும் பிரதானமாக பார்க்கப்படுகிறது.இந்த ஒரு வாரத்தில் 2விழுக்காடு வரை சந்தைகள் சரிந்துள்ளன. உலகளாவிய சந்தையில் சரிவு நிலவுவது கூட முக்கிய காரணமாக கூறப்படுகிறது.பரஸ்பர நிதித்துறை சரி செய்ய செபி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவும் முக்கிய காரணமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தையில் சரிவு நிலவியதும் இந்த வார சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.வெளிநாட்டு பங்குச்சந்தை நிலவரங்களை உள்ளூர் சந்தை முதலீட்டாளர்கள் கூட கவனித்து வருகின்றனர்.லாபத்தை பதிவு செய்வதிலேயே முதலீட்டாளர்கள் இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.நிதியாண்டு முடியும் காரணத்தால் வரும் சில வாரங்களில் இதே நிலை தொடரவும். வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தோர்.