22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்திவேலைவாய்ப்பு

ஆப்பிள் வாட்ச்சால் பலருக்கு வேலை போகப்போகுது ஏன்?

ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த தயாரிப்பான ஆப்பிள் வாட்சின் டிஸ்பிளேவை உற்பத்தி செய்வதை நிறுத்தப்போகிறது. இதனால் ஏராளமானோருக்கு வேலை பறிபோகும் அபாயம் உண்டாகியுள்ளது. மைக்ரோ எல்ஈடி தொழில் நுட்பத்தால் கவனம் ஈர்க்கப்பட்ட அந்த வாட்ச் மிகக்குறைந்த அளவிலேயே வருங்காலங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த முடிவால் அமெரிக்கா,ஆசியாவில் ஏராளமானோருக்கு வேலை பறிபோகும் சூழல் உண்டாகியுள்ளது. ஆப்பிள் தானியங்கி கார் திட்டம் போல ஆப்பிள் வாட்ச்சின் டிஸ்பிளே தயாரிக்கும் குழுவினரையும் பணியில் இருந்து முழுமையாக நீக்காமல்,ஒரு சிலரை மட்டும் வேறு பணிகளுக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால் சிலரை வேலையில் இருந்து நீக்குவதை தவிர்த்து வேறு வழியில்லை என்றும் அந்நிறுவனம் கடினமான முடிவை எடுத்துள்ளது. எல்ஜி டிஸ்பிளே, சாம்சங் டிஸ்பிளே உள்ளிட்ட நிறுவனங்களிடம் டிசைனை தள்ளிவிடவும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மைக்ரோ எல்இடி நுட்பத்தை 7 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருந்தாலும் அது மிகவும் கடினமான நுட்பமாக இருப்பதால் அதன் டிஸ்பிளே இன்ஜினியர்களின் வேலைகளை தற்போது காலி செய்திருக்கிறது. மைக்ரோ எல்ஈடி தொழில்நுட்பத்தை ஆப்பிள் கைவிடுவதால் அதை சார்ந்திருக்கும் நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு ஏற்பட இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *