ஆபரணத்தங்கம் விலை அரை லட்சம்..
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரு சவரன் 50 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 6250 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 50ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை,கிராமுக்கு30காசுகள் உயர்ந்து 80 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 300ரூபாய் உயர்ந்து 80 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 28 ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 665 புள்ளிகள் உயர்ந்து 73,651 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி203 புள்ளிகள் உயர்ந்து 22,326புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது.துவக்கத்தில் இருந்தே பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச்சந்தையில் Bajaj Finserv, Grasim Industries, Hero MotoCorp, Bajaj Finance and Eicher Motors ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல் Shriram Finance, Tech Mahindra, Axis Bank, Reliance Industries and Britannia Industriesஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. ஆட்டோமொபைல், சுகாதாரத்துறை, உலோகம், ஆற்றல்துறை பங்குகள் 1 விழுக்காடு உயர்ந்தன. தகவல் தொழில்நுட்பத்துறை, எண்ணெய் மற்றும் கேஸ் துறை, வங்கி, ரியல் எஸ்டேட், உள்ளிட்ட துறைகளின் பங்குகள் அரை விழுக்காடு வரை உயர்ந்திருக்கின்றன. ABB India, Adani Ports, Arvind SmartSpaces, Bharat Bijlee, Century Textiles and Industries, Chalet Hotels, Cummins India, Grasim Industries, IFB Industries, Indus Towers, Info Edge, Kalyan Jewellers, L&T, Oracle Financial Services, Sanghvi Movers, Siemens உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளன. புனிதவெள்ளியை ஒட்டி பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது