அமர ராஜாவுடன் கைகோர்த்த ஏத்தர்….
பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஏத்தர் நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். இந்த நிறுவனம் இந்திய பேட்டரி தயாரிப்பு நிறுவனமான அமரராஜாவுடன் வணிக ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. வெளிநாட்டு பொருட்களை நம்பியிருக்கும் சூழலை குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திருப்பதியை தலைமை இடமாக கொண்டு அமரராஜா பேட்டரி நிறுவனம் இயங்கி வருகிறது.
அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இரு நிறுவனங்களின கூட்டு தயாரிப்பு மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறு. அடுத்த 4 -5 ஆண்டுகளில் முழுமையான இந்திய நிறுவனமாக மாற ஏத்தர் உறுதி பூண்டுள்ளது. இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்படும் பேட்டரிக்ள் 20 டிகிரி செல்சியஸை தாக்குபிடிக்க முடியாத அளுவுக்கு உள்ளது. ஆனால் இந்தியாவில் சராசரியாக 25 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் வாட்டும். கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் மட்டும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 35,879 வாகனங்களை விற்றுள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு விற்பனையில் 42 விழுக்காடு அதிகமாகும். ஒரு கிலோவாட்டுக்கு இவ்வளவு என்று மத்திய அரசு வழங்கி வந்த மானியம் குறைக்கப்பட்ட பிறகு விற்பனை சற்று தொய்வாக காணப்படுகிறது.