கூடுதல் சரிபார்ப்புக்கான விதிகள்..
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதில் ரிசர்வ் வங்கி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக வரைவு திட்ட அறிக்கையை அந்த வங்கி செய்து வருகிறது. அதாவது ஆங்கிலத்தில் கூடுதலாக பாதுகாப்பு அம்சம் என்பதை குறிக்கும் AFA என்ற வசதியை அறிமுகப்படுத்த திட்டம் உள்ளது. இது சிறிய தொகைகள் மட்டுமின்றி, 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செல்லும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அவசியமாகுமா என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கார்டுகள் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்த விதிகள் பொருந்தாது என்றும் கூறப்படுகிறது. முதல் சரிபார்ப்பும், கூடுதல் சரிபார்ப்பும் தலைகீழாக வேறு மாதிரி சரிபார்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போது வரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எஸ்எம்எஸ் வழியாக வரும் ஓடிபிகள் மூலம் சரிபார்ப்புகள் நடக்கின்றன.
கடந்த பிப்ரவரி முதல் புதிய முயற்சியை ரிசர்வ் வங்கி சோதித்து வருகிறது. வங்கிகள், வங்கிகள் அல்லாத நிறுவனங்கள் AFAவை பரிசீலிக்க ரிசர்வ் வங்கியின் புதிய விதி வகை செய்கிறது. வாடிக்கையாளர், பரிவர்த்தனை மதிப்பு, எந்த சானல் வழியாக பரிவர்த்தனைகள் நடக்கின்றன உள்ளிட்ட அம்சங்கள் இந்த பரிவர்த்தனைகளுக்கு தேவைப்படும் என தெரிகிறது. டோக்கன்களுடன் கூடிய கார்டு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும்போது அது சார்ந்த உபகரணங்கள் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.