இது அல்ட்ராடெக் நிறுவனத்தின் ஆஃபர்..
அல்ட்ராடெக் நிறுவனம் அண்மையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் குறிப்பிடத்தகுந்த பங்குகளை வாங்கிவிட்டது. இந்த நிலையில் அல்ட்ராடெக் நிறுவனம் ஓபன் ஆஃபர் மூலம் வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 3 வரை ஓபன் ஆஃபரை அறிவித்துள்ளது. ஒரு பங்கின் விலை 390 ரூபாய் என்ற அடிப்படையில் 8.05 கோடி அளவுள்ள இந்தியா சிமென்ட்ஸ் பங்குகளை அல்ட்ராடெக் நிறுவனம் 26 விழுக்காடு அளவுக்கு வாங்க இருக்கிறது. இது தொடர்பாக அல்ட்ராடெக் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பை வெளியிட்டது. டிமார்ட் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் தமானி வைத்திருந்து 23 விழுக்காடு பங்குகளை இந்தியா சிமென்ட்ஸில் இருந்து அல்ட்ராடெக்கிடம் கைமாற்றிவிட்டார். தற்போது இந்தியா சிமென்ட்ஸில் 55.49 விழுக்காடு அளவுக்கு அல்ட்ராடெக் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. மேலும் 26 விழுக்காடு அளவுக்கு உள்ள பங்குகளை 3142 கோடி ரூபாய்க்கு வாங்கவும் திட்டம் உள்ளதாம். இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன பங்குகளில் அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் அதிகம் பங்கு வைத்திருக்கும் நிலையில், பங்குச்சந்தையில் இருந்து இந்தியா சிமென்ட்ஸை நீக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று அல்ட்ராடெக் நிறுவனம் கூறியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை முடியும் போது இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் 372 ரூபாய் 04 பைசாவாக இருந்தது. இது முன்தின வணிகத்தை விட 2 விழுக்காடு அதிகமாகும். கடந்த ஜூன் மாதம்முதல் இந்தியாசிமென்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்து அதிக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இந்த பங்கின் விலை கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 82 % விலை ஏற்றம் கண்டுள்ளது