பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு
ஆகஸ்ட் 08 ஆம் தேதி வியாழக்கிழமை, இந்தியப்பங்குச் சந்தைகள் சரிவில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 581 புள்ளிகள் குறைந்து 78 ஆயிரத்து 886 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 180 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து117 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவுற்றது. LTIMindtree, Grasim Industries, Asian Paints, Power Grid Corp,Infosys ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன HDFC Life, Tata Motors, SBI Life Insurance, HDFC Bank, Cipla,உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் கண்டன. ஆகஸ்ட் 08ஆம் தேதி வியாழக்கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு160ரூபாய் உயர்ந்து விற்பனையானது. ஒருசவரன் 50 ஆயிரத்து800ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6,350 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி முன்தின விலையில் இருந்து 50 காசுகள் குறைந்து 86.50ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளியும் விலையும் கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 86ஆயிரத்து 500 ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்