மஹிந்திரா நிறுவனத்துக்கு புதுவித வரி..
மஹிந்திரா நிறுவனத்துக்கு அண்மையில் ஜிஎஸ்டி நிறுவனத்திடம் இருந்து வித்தியாசமான நோட்டீஸ் வந்துள்ளது. அதில் மஹிந்த்ரா நிறுவனம் அதன் பிராண்ட் பெயரை பல நிறுவனங்களில் பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் ஏன் பிராண்ட் டாக்ஸ் என்ற வகையில் ஜிஎஸ்டி செலுத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 2017 முதல் 2023 ஆம் ஆண்டுவரைக்கும் இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. தாய் நிறுவனமாக மஹிந்திரா நிறுவனம் திகழும் நிலையில் மற்ற நிறுவனங்கள் ஏன் ஜிஎஸ்டி செலுத்தக்கூடாது என்றும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் மட்டுமின்றி பல நிறுவனங்களுக்கும் இது போன்ற நோட்டீஸ் பறந்துள்ளது. ஒரு நிறுவனத்துக்கு ராயல்டி தொகையாக 10 கோடி ரூபாய் செலுத்தப்படும்பட்சத்தில் அதற்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் அதாவது 1.8 கோடி ரூபாய் ஜிஎஸ்டியாக செலுத்த வேண்டும். இதனால் தாய் நிறுவனத்துக்கு 11.8 கோடி ரூபாய் செலவு கணக்காகும், அதில் 1.8 கோடி ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும். அண்மையில் மும்பையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனங்களுக்கும் இதே பாணியில் நோட்டீஸ்களை ஜிஎஸ்டி அமைப்பு அனுப்பி இருந்தது. பல கட்டுமான நிறுவனங்கள், ஒரே நேரத்தில் பல பணிகளை செய்துவருவதால் அதற்கும் தனி ஜிஎஸ்டி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது வரை பிராண்டுக்கு எந்த வரியும் விதிப்பது பற்றி அரசு எந்த பரிசீலனையும் செய்யவில்லை. கார்பரேட் நிறுவனங்களில் ஒரே நிறுவனத்தின் கீழ் ஒரே பிராண்டில் வேறு வேறு பணிகள் செய்தாலும் மொத்த பணத்தில் 18 விழுக்காடு அரசுக்கு வட்டி விதிக்கப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி உதாரணத்துக்கு கார்பரேட் கேரண்டிக்கு 100 கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது எனில், அதன் தாய் நிறுவனத்துக்கு 18 லட்சம் ரூபாய்க்கான ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.