வங்கி டெபாசிட் குறைய யார் காரணம்?
கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளில் டெபாசிட் செய்யும் தனிநபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து,அந்த டெபாசிட் மியூச்சுவல் பண்ட் பக்கம் திரும்பியுள்ளது. இதன் பின்னால் இருக்கும் இயக்கவியலை முதலில் புரிந்துகொள்வோம். நடப்பு நிதியாண்டில் வங்கிகள் 7.18டிரில்லியன் ரூபாய் அளவுக்கு முதல் 7 மாதங்களில் டெபாசிட்களை பிடித்துள்ளனர். அதே நேரம் கடனாக 3.83 டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள தொகை அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் டெபாசிட்களை பெறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் ஒரு தொகையை எப்போதும் வைத்திருக்கும். அதற்கு பெயர் ரிசர்வ் மனி. ரிசர்வ் வங்கி வெளியிடும் பத்திரங்கள், வெளிநாட்டு பணம் மற்றும் பத்திரங்கள் இவை அனைத்தும் ரிசர்வ் மனி என்பதே. 2024 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அளித்த கடன் கணிசமாக குறைந்துள்ளது. அதே நேரம் 2023-ல் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி கடனே தரவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய அம்சம். ரிசர்வ் வங்கியை இயக்கவும் பேலன்ஸ் ஷீட்டை நிலையாக வைத்திருக்கவும் சில தொகையை ரிசர்வ் வங்கி எடுத்து வைத்துள்ளது. அதே நேரம் தேவையில்லாத செலவுகளும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ரிசர்வ் மனி என்ற தொகை குறைந்ததன் காரணமாகவே ரிசர்வ் வங்கியின் சேமிப்பும் குறைந்துள்ளது. 2020-22 காலகட்டத்தில் புதிய பணம் உருவாக்கம் 20 டிரில்லியன் ரூபாயாக இருந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக வெறும் 0.6 டிரில்லியன் அளவுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே டெபாசிட் குறைவுக்கு காரணமாக கூறப்படுகிறது. ஒவ்வொரு முறை வாடிக்கையாளர்களுக்கு கடனை வங்கிகள் தரும்போதும் அதுவும் டெபாசிட்தான். ஆனால் அதே நேரம் நிஜமான டெபாசிட் வங்கிகளுக்கு பதிலாக ஈக்விட்டி மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளாக சென்றுவிடுகிறது. பங்குகளாக வாங்கினால் அவை பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் என்றும் அதே நேரம் தனிநபர்கள் டெபாசிட்டை அதிகரித்தால் ரிஸ்க் குறைவு என்றும் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டுகிறது. இதுவே தற்போதைய நிலைக்கு முக்கிய காரணமாக நிபுணர்கள் விளக்குகின்றனர்.