ஷாம்பு, நூடல்ஸ், துணிகள் விற்பனை மந்தம்..
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. மகாராஷ்டிராவில் பெய்த பலத்த மழை காரணமாக, லக்ஸ், லைஃப்பாய், ரின், சர்ப் எக்சல் சோப்புகள் விற்பனை மந்தமாக நடந்துள்ளதாம்.
சில கிராமங்களுக்கு நேரில் செல்ல முடியாத அளவுக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன. அடுத்த சில மாதங்கள் மகாராஷ்டிராவில் அறுவடை காலம் என்பதால் மக்கள் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவார்கள் என்று விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அடிப்படை தேவை இல்லாத நகைகள், ஆடம்பர துணிகளின் விற்பனையும் மந்தமடைந்துள்ளது. ஷாப்பர்ஸ் ஸ்டாப், பாடா, மெட்ரோபிரான்டுகள் கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்துள்ளன. உணவுப்பொருட்கள் விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு உள்ள நிலையில், சமையல் எண்ணெய் மற்றும் சில பொருட்களை மக்கள் கொஞ்சமாகவே வாங்குகின்றனர். சத்தீஸ்கரில் டியோடரன்ட், பாடி லோஷன், முகத்துக்கு பூசும் கிரீம்களை மக்கள் குறைந்த அளவே வாங்குவதாகவும், சிறிய ஷாம்பு பாக்கெட்டுகளைத்தான் மக்கள் விரும்பி வாங்குவதாகவும், பிஸ்கட்டுகள், நூடுல்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் கடந்த சில மாதங்களாக மந்தமாக உள்ளன.குறிப்பாக கிராமபுறங்களில் இவற்றிற்கான விற்பனை அளவு கணிசமாக குறைந்துள்ளது. துணிகளில் நகரம் கிராமம் என்று பாரபட்சமின்றி அனைத்து இடங்களிலும் விற்பனை குறைந்துள்ளதால், 5 முதல் 6 விழுக்காடு தள்ளுபடியை பிரபல நிறுவனங்கள் அளிக்கின்றனர். வரும் பண்டிகை நாட்களிலும், கல்யாண சீசன் தொடங்கியபோதும் விற்பனை மீண்டும் அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.