இந்திய சந்தைகளில் 14 நாட்கள் பெரிய சரிவில்லை..
செப்டம்பர்3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய ஏற்றம் காணப்படவில்லை. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 4 புள்ளிகள் சரிந்து 82ஆயிரத்து 555 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1புள்ளி உயர்ந்து 25ஆயிரத்து279புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. SBI Life Insurance, ICICI Bank, HDFC Life, Shriram Finance,Bajaj Finserv, ஆகிய நிறுவன பங்குகள் லாபம் கண்டன. ONGC, Infosys, Bajaj Finance, JSW Steel ,Adani Ports ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. வங்கித்துறை பங்குகள் மட்டுமே அரை விழுக்காடு உயர்ந்தன. மற்றபடி ஊடகம், ஆற்றல், உலோகம், ரியல்எஸ்டேட் ஆகிய துறை பங்குகள் அரை முதல் ஒன்றரை விழுக்காடு வரை பங்குகள் விலை சரிந்தன. Abbott India. Bombay Burmah, Eris Life, Godrej Industries, HFCL, Jindal Saw, JM Financial, Lupin, M&M Financial, MphasiS, Oracle Financial Services, PCBL, Persistent Systems, PI Industries, Poly Medicure, Quess Corp, Shriram Finance, Voltas, உள்ளிட்ட25 0க்கும் அதிகமான நிறுவனங்கள் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டன. செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 670 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 360 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலையும் மாற்றமின்றி 91 ரூபாய் ஆக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோ 91 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும்.