ரிலையன்ஸின் போன்ஸ் பங்குகளுக்கு ஒப்புதல்!!!
தீபாவளி பரிசாக 1:1 என இலவசமாக பங்குளை போனசாக தருவதாக ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிஅண்மையில் நடந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அறிவித்திருந்தார். அதற்கு செப்டம்பர் 5 ஆம் தேதி நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பங்கு மூலதனத்தை 15 ஆயிரம் கோடியில் இருந்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தவும் இயக்குநர்கள் குழு இசைவு தெரிவித்துள்ளது. ரெக்கார்ட் தேதி பின்னர் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்படும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் போனஸ் அளிப்பது இது 6 ஆவது முறையாகும். கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு அந்நிறுவனம் பங்குதாரர்களுக்கு போனஸ் அளித்திருந்தது. அதற்கும் முன்பாக கடந்த 2009-ல் போனஸ் பங்குகள் அளிக்கப்பட்டன. கடந்த 4 ஆம் தேதி வரை ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 17 விழுக்காடு ஏற்றம் பெற்றுள்ளன. அதே நேரம் நிஃப்டியில் 16 % உயர்வை கண்டுள்ளன. நிஃப்டி 50 பங்குச்சந்தையிலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சிறப்பான முன்னேற்றத்தை அளிக்கின்றன. அதே நேரம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் ஆண்டுக்கு ஆண்டு 4 % சரிவை சந்தித்துள்ளன. கடந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் 18,182கோடி ரூபாயாக இருந்த பங்குகள் இந்தாண்டு 17,448 கோடி ரூபாயாக இருந்தன. 2027 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பை இரட்டிப்பாக்கவும் பணிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.