டிசிஎஸ் நிறுவன பணியாளர்களுக்கு ஐ.டி. நோட்டீஸ்..
இந்தியாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமாக டிசிஎஸ் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் சிலருக்கு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் சென்றுள்ளது. அதில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 143 உட்பிரிவு 1-ன் கீழ் சில ஊழியர்களஉக்கு நோட்டீஸ் சென்றுள்ளது. 2024 நிதியாண்டில் டிடிஎஸ் தொகை தொடர்பாக பல்வேறு கேள்விகளை வருமான வரித்துறை கேட்டுள்ளது. குறிப்பிட்ட தொகை ரெக்கார்டில் இல்லை என்பதால் அதற்கு உண்டான வட்டியும் அதற்கான அபராத கட்டணமும் செலுத்த நேரிடும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் முதல் 1.45லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தப்பட வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த தகவல் வந்திருக்கலாம் என்றும், வருமான வரி கணக்கு மற்றும் பணம் திரும்பப் பெறுவது தாமதமாவதாகவும் டிசிஎஸ் ஊழியர்கள் புலம்புகின்றனர். tds-ஐ 26AS என்ற படிவத்துடன் இணைக்க வேண்டும் என்று டிசிஎஸ் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. பெறப்பட்டுள்ள நோட்டீஸில் உள்ள தொகைகள் எதையும் செலுத்தத் தேவையில்லை என்றும் டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது.
பிரச்சனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளே தெரியப்படுத்துவார்கள் என்றும் டிசிஎஸ் நிறுவனம் தனது மின்னஞ்சலில் பணியாளர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.