அதிக ரியல் எஸ்டேட் வணிகம்தான் காரணமா?
ஷார்ட் செல்லர்ஸ் என்ற பிரிவினரின் எளிதான இலக்காக ரியல் எஸ்டேட் துறையுடன் அதிக தொடர்பில் இருக்கும் வங்கிகள் இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடந்த நிதி சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ரியல் எஸ்டேட் சார்ந்த வங்கிகளின் தொடர்புகளால் இழப்புகள் அதிகம் இருப்பதாக சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். விழிப்புடன் இருப்பது பெரிய ரிஸ்குகளை தடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். , இந்திய வங்கிகள் வணிக ரியல் எஸ்டேட் துறை சார்ந்து அதிக கடன்கள் தந்திருப்பதாகவும், இதுவே சந்தையில் நல்ல நம்பிக்கையை அளித்திருப்பதாகவும் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார். இந்தியாவில் கடந்த மே மாத ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, வணிக வங்கிகளின் ரியல் எஸ்டேட் போர்ட்ஃபோலியோ 22.94விழுக்காடு ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வருவதாகவும், இதன் மதிப்பு 3.96லட்சம் கோடி ரூபாயாக இருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 2022 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 25,342 கோடி ரூபாய் மட்டுமே கடன்கள் வழங்கப்பட்டதாகவும், இது கடந்த மார்ச் 2023-24 காலகட்டத்தில் 74,006 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி, சிறப்பான கட்டுப்பாடுகள் காரணமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரியல் எஸ்டேட் துறையினர் அதிக அளவில் முதலீடுகளை ஈக்விட்டி வாயிலாக செய்திருப்பதாகவும் கருதப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறையில் புதிய விதிகளை கொண்டுவர இருப்பதாகவும் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார். ஆகஸ்ட் மாத பணவீக்கம் லேசான உயர்வை பெற்றிருப்பதாகவும், அதேநேரம் ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 விழுக்காடுக்குள்தான் இருப்பதாகவும் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் நுகர்வோர் பண குறியீடான சிபிஐ 3.65 விழுக்காடாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
2 முதல் 6 விழுக்காட்டுக்குள் பணவீக்கம் இருந்தால் அது பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், ரிசர்வ் வங்கி 4 விழுக்காடுக்கு மேல் வைக்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளதாகவும் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டார்.