அதிக டிஜிட்டல் டெபாசிட் வைக்க திட்டம்…
டிஜிட்டலாக அதிக டெபாசிட் செய்ய வங்கிகள் முன்வரவேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளது. பணப்புழக்கத்தை சமாளிக்க இந்த அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் கடந்த ஜூலை மாதமே 5% கூடுதல் ரன் ஆஃப் பேக்டர் என்ற வகையில் டெபாசிட்டை அதிகரிக்கக் கோரியிருந்தது ரிசர்வ்வங்கி. இந்நிலையில் இந்த நடைமுறை அடுத்த ஏப்ரல் முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவர ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இந்திய வங்கிகள் சங்கமான ஐபிஏ, ரிசர்வ் வங்கியிடம் இந்த விகிதத்தை 2 அல்லது 3 விழுக்காடாக குறைக்க முறையிட்டனர். ஆனால் அவ்வாறு செய்தால் வங்கியில் இருக்கும் பணம் குறைந்து அமெரிக்க வங்கிகள் சந்தித்ததை போல சூழல் உருவாகும் என்றும் எச்சரித்துள்ளார் ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர். கடந்தாண்டு அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் வேலி வங்கியில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் பணத்தை எடுத்ததால் அந்த வங்கி திவால் ஆனது. இதனை கருத்தில் கொண்டு செயல்படும் ரிசர்வ்வங்கி, புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்தியாவில் உள்ள டெபாசிட்களில் 3-ல் இரண்டு பங்கு அளவு, டிஜிட்டலாக எளிதில் எடுக்கும் வகையில் இருப்பதாக மூடீஸ் என்ற நிறுவனம் எச்சரித்துள்ளது. LCR என்ற அளவை மாற்றி அமைக்கவும் இந்திய ரிசர்வ்வங்கி திட்டம் தீட்டி வருகிறது. இது தொடர்பான இறுதி முடிவு எடுக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் ரிசர்வ் வங்கி, வரைமுறைகளை இறுதி செய்யும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.