1.1 கோடி பேர் 3 ஆண்டுகளில் 1.8லட்சம் கோடி ரூபாய் இழப்பு..
எந்தவித முன் அனுபவமும் இன்றி எப் அன்ட் ஓ எனப்படும் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்துள்ளீர்களா., இந்த செய்தி உங்களுக்குத்தான். கடந்த 2022-24 காலகட்டத்தில் மட்டும் 3 ஆண்டுகளில் 1.13கோடி வாடிக்கையாளர்கள் 1.81லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளதாக செபியின் ஆய்வறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தனிப்பட்ட நபர்கள் இழப்பு மட்டுமே சராசரியாக 1.60லட்சம் ரூபாயாக இருக்கிறுத. அதேநேரம் லாபத்தை ஈட்டியவர்கள் சராசரியாக 3லட்சம் ரூபாய் வரை கூட உயர்ந்துள்ளனர். 93 விழுக்காடு பேர் சராசரியாக ஓராண்டில் இழந்துள்ளதாகவும், 3.5 விழுக்காடு அளவுள்ள 4லட்சம் முதலீட்டாளர்கள் சராசரியாக 28லட்சம் ரூபாயை இழந்துள்ளனர். மொத்தமே 7.2 விழுக்காடு அளவுக்கு மக்கள் மட்டும்தான் கடந்த 3 ஆண்டுகளில் லாபத்தை பதிவு செய்துள்ளனர். 2024 -ல் மட்டும் ஃபியூச்சர்ஸ் பிரிவில் 60 விழுக்காடு மக்களும், ஆப்சன்ஸில் 91.5விழுக்காடு நஷ்டத்தையும் சந்தித்துள்ளதாக செபி தனது புள்ளிவிவரத்தில் எச்சரித்துள்ளது. கடந்த 2022-ல் சில்லறை முதலீட்டாளற்கள் எண்ணிக்கை 51லட்சமாக இருந்த நிலையில் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் தற்போது, 96லட்சம் பேர் வர்த்தகம் செய்கின்றனர். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யும் போக்கு கடந்த 2023-ல் 31 விழுக்காடாகாவும், தற்போது இது 43 விழுக்காடாகவும் உள்ளது. எனினும் போதிய அனுபவம் இல்லாததால் பெரும்பாலானன முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அதே நேரம் 60 வயதுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்கின்றனர். ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருவாய் உள்ளவர்கள்தான் அதிக இழப்பை சந்திப்பதாகவும், ஆண்கள் பணத்தை இழக்கும் வாய்ப்பு 91.9 விழுக்காடாகவும், பெண்கள் பணத்தை இழப்பது 86.3 விழுக்காடாகவும் உள்ளதாக செபி எச்சரித்துள்ளது.